தொழிலாளி விஷம் குடித்து சாவு

நாசரேத் அருகே தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.

Update: 2022-11-26 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுடலை மணி மகன் சலீம் குமார் (வயது 42). இவர் கோவையில் ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதிர்ஷ்ட லட்சுமி (36) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சின்ன மாடன் குடியிருப்பு பஸ்நிறுத்தத்தில் சலீம் குமார் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு நெல்லையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவா் உயிரிழந்தார். இதுகுறித்து நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்