ரேஷன் கடைகளுக்கு செங்கரும்புகள் அனுப்பி வைக்கும் பணி மும்முரம்

பொங்கல் பரிசு இன்று முதல் வழங்கப்படுவதால் ரேஷன் கடைகளுக்கு செங்கரும்புகள் அனுப்பி வைக்கும் பணி நேற்று மும்முரமாக நடந்தது.

Update: 2023-01-08 18:45 GMT

பொங்கல் பரிசு இன்று முதல் வழங்கப்படுவதால் ரேஷன் கடைகளுக்கு செங்கரும்புகள் அனுப்பி வைக்கும் பணி நேற்று மும்முரமாக நடந்தது.

பொங்கல் பரிசு

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணி தொடங்குகிறது.

டோக்கன்

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 702 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக டோக்கன் வழங்கும் பணி கடந்த 3-ந் தேதி தொடங்கி வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி 13-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கடைக்கு அனுப்பும் பணி

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்பு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அந்தந்த ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று மும்முரமாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்