தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் மும்முரம்
தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.;
விக்கிரவாண்டி,
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்காக கடந்த 4-ந்தேதி பந்தல் கால் நடப்பட்டது.இம்மாநாட்டுக்காக மொத்தம் 176 ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்துள்ளனர். இதில் 90 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைய உள்ளது. மீதமுள்ள இடங்கள் மாநாட்டுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.. மாநாட்டுக்கான மேடை 60 அடி அகலம், 170 அடி நீளத்தில்அமைக்க ஏற்பாடு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது. மாநாட்டு திடலில் 50 ஆயிரம் இருக்கைகள் போட முடிவு செய்யப்பட்டு அதற்காக அளவீடு செய்யப்படுகிறது. அதுபோல் மேடையில் கட்சியின் தலைவர் விஜய், ஓய்வு எடுப்பதற்கு ஏற்ப தனி அறைகளும், வி.ஐ.பி.க்களுக்கு என தனி அறைகளும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் மாநாடு நடைபெறும் இடத்தின் முகப்பை செயின்ட் ஜார்ஜ் கோட்டை (சட்டசபை) போன்ற வடிவத்தில் அமைக்க உள்ளதாகவும், குடிநீர் வசதி, கழிவறைகள் அமைக்கப்படுவதாகவும் மேடை அமைக்கும் ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.