வேண்பாக்கத்தில் விநாயகர் கோவிலை 5 அடி உயரம் உயர்த்தும் பணி தீவிரம்

வேண்பாக்கத்தில் விநாயகர் கோவிலை 5 அடி உயரம் உயர்த்தும் பணி தனியார் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.

Update: 2023-03-20 12:13 GMT

பொன்னேரி நகராட்சியில் அடங்கியது வேண்பாக்கம். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சாலை பணியால் கோவில் இருக்கும் இடம் பள்ளமாக மாறியது. இதனால் மழை காலங்களில் மழைநீர் கோவிலுக்கு புகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பழைமை வாய்ந்த இந்த கோவிலை தரைமட்டத்தில் இருந்து 5 அடி வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டதையடுத்து, கோவிலை உயர்த்தும் பணி தனியார் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.

நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கோவிலை இடிக்காமல் 50 ஜாக்கிகள் இரும்பு தளவாடங்கள் கொண்டு 5 அடிக்கு உயர்த்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முழுவதும் 15 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் சுற்றுசுவர், பக்தர்கள் வரும் பாதை உள்பட பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்