ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி

ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா ஆய்வு செய்தார்.

Update: 2023-02-01 17:56 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் 2021-2022-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் தனி நபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை கூடுதல் அரசு தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது எஸ்.தேவராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் வழங்கப்படும் குடிநீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.

குடிநீரில் இரும்பு சத்து, உப்பு, காரத்தன்மை, பொட்டாசியம், உள்ளிட்ட 12 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உகந்ததா எனவும் கேட்டறிந்தார். ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தனஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்