மழையில் நனைந்த நெல்லை காயவைக்கும் பணி

மழையில் நனைந்த நெல்லை காயவைக்கும் பணி

Update: 2023-02-11 18:45 GMT

திருமருகல் பகுதியில் மழையில் நனைந்த நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை காய வைக்கும் பணி

திருமருகல் ஒன்றிய பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டது. பல்வேறு இடங்களில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை மூட்டையாக கட்டி வயல்களில் அடுக்கி வைத்திருந்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து அறுவடை செய்யப்பட்ட நெல் நனைந்தது.அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதத்துக்கும் குறைவாக ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் மழையில் நனைந்த நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

22 சதவீத ஈரப்பத நெல்லை

திருமருகல் ஒன்றிய பகுதிகளான குத்தாலம், உத்தமசோழபுரம், நரிமணம், கோபுராஜபுரம், அம்பல், பில்லாளி, எரவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையில் நனைந்த நெல்லை சாலைகளில் கொட்டி காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 22 சதவீத ஈரப்பத நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்