கலிச்சாக்குளம் ஏரியை தூர்வாரும் பணி மும்முரம்
கலிச்சாக்குளம் ஏரியை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் கலிச்சாக்குளம் ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.