மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-28 18:34 GMT

தா.பழூர் அருகே உள்ள கோடாலி பகுதியில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோடாலி பகுதியில் மது பாட்டில்களை சிலர் பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கோடாலி காலனி தெரு தங்கராசு மனைவி ராதிகா(40) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராதிகா விற்பனைக்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராதிகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்