அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வடுகபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் திருமானூர் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கிய மேரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மலர் (வயது 52) என்பவரது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.