சிகிச்சை பலனின்றி பெண் சாவு

கூடலூரில் அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்

Update: 2022-10-16 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரியசூண்டியை சேர்ந்த தங்கவேல். இவரது மனைவி கனகம்மாள் (வயது 65). நேற்று முன்தினம் 2 பேரும் கூடலூர் வந்தனர். ராஜகோபாலபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கனகம்மாள் மீது அரசு பஸ் மோதியது. இதில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கனகம்மாளை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கனகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்