திடீரென துரத்திய காட்டு யானை... அரண்டு போன மக்கள்... முதுமலை அருகே பரபரப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றுலாப்பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுற்றுலாப்பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக வாகன சவாரி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வனத்துறை வாகனத்தில் சுற்றுலாப்பயணிகள் சிலர் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த யானை ஒன்று சுற்றுலாப்பயணிகள் நோக்கி துரத்தி வந்தது.
இதையடுத்து வாகன ஓட்டி சாதூர்யமாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தினார். பின்னர் விரட்டி வந்த யானை திரும்பிச்சென்றது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.