தந்தத்தால் குத்தி காரை சேதப்படுத்திய காட்டுயானை

தந்தத்தால் குத்தி காரை சேதப்படுத்திய காட்டுயானை

Update: 2022-07-01 13:22 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி ஒற்றவயல், மச்சிக்கொல்லி, பேபி நகர், மட்டம், செம்பக்கொல்லி, செட்டியங்காடி உள்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தேவர்சோலை அருகே ஒற்றவயல் பகுதியில் காட்டுயானை நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த கபீர் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரை காட்டு யானை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்