நுரை போல் பொங்கிச் சென்ற தண்ணீர்; அதிகாரிகள் ஆய்வு
நெல்லையில் நுரை போல் பொங்கிச் சென்ற தண்ணீரை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நெல்லை ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லும் ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் அருகில் நேற்று திடீரென்று வெள்ளை நிறத்தில் நுரை போல் தண்ணீர் வெளியேறியது. இதுகுறித்து அந்த பகுதி பொது மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சுற்றுச்சூழல் உதவி செயற்பொறியாளர் நம்பிராஜன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினார்கள். மேலும் அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.