விவசாயி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
விவசாயி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 55).விவசாயி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஆலங்குடி பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் நல்லதம்பி வீட்டின் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.