குளத்தில் வேன் கவிழ்ந்தது
தென்காசி அருகே குளத்தில் வேன் கவிழ்ந்தது- 20 பேர் காயம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானை கோட்டை என்ற ஊரில் இருந்து சுந்தர் (வயது 52), ராமாத்தாள் (65) மற்றும் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் ஐந்தருவி அருகில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு பூஜையில் கலந்து கொள்ள வந்தனர்.
தென்காசி அருகே அய்யாபுரம் பகுதியில் இடையான்குளம் என்ற குளம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோ மீது வேன் திடீரென மோதியது. இதில் வேன் நிலை தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது. ஆட்டோவில் இருந்த அய்யாபுரத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மேலும் வேன் டிரைவர் புளியங்குடி காலனி நகரைச் சேர்ந்த சப்பாணி மகன் ராமர் (48), சுந்தர், ராமாத்தாள் உள்பட சுமார் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் தண்ணீர் இல்லாததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.