சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

வேடசந்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார்.;

Update:2022-06-15 21:06 IST


திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி விறகு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, அய்யம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சித்தமரம் நால்ரோடு பகுதியில் லாரி வந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் கண்ணன் காயம் அடைந்தார். அவருக்கு, வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்