சேலம் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வைக்கோல் ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்த ஆனந்த் குமார் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த முத்தையன் மகன் அறிவழகன் (30) என்பவரும் உடன் வந்துகொண்டிருந்தார். நாமக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குணசீலம் அருகே லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாசன வாய்க்காலுக்குள் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆனந்த்குமார், அறிவழகன் ஆகிய 2 பேரும் உடலில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.