பக்தர்கள் சென்ற லாரி கவிழ்ந்து2 பேர் பலி-10 பேர் படுகாயம்
பக்தர்கள் சென்ற லாரி கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பரமக்குடி,
பக்தர்கள் சென்ற லாரி கவிழ்ந்து 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரியில் சென்ற பக்தர்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குலாளர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகைராஜ் (வயது 30). இவர் தனது உறவினர்களுடன், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கோவிலுக்கு லாரியில் சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு அதே லாரியில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பரமக்குடி அருகே தேவனேரி விலக்கு ரோடு அருகில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணித்த மானாமதுரையை சேர்ந்த பாபு என்பவரின் மனைவி லெட்சுமி (68) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகன் (45), பலத்த காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
10 பேர் படுகாயம்
மேலும் இந்த விபத்தில் சங்கீதா (42), சாத்தையா (49), சாரதா (63), ராம்தாஸ் (20) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கார்த்திகைராஜ் கொடுத்த புகாரின்ேபரில் பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கண்ணனை (52) கைது செய்தனர்.