மரம் சாய்ந்து விழுந்ததால் மின்கம்பி அறுந்தது

பாபநாசத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் மின்கம்பி அறுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-12 21:15 GMT

பாபநாசம்,:-

பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையால் திருப்பாலைத்துறை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரம் சாய்ந்து விழுந்தது. அப்போது மரம் விழுந்ததால் மின்கம்பி அறுந்தது. இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து முறிந்து விழுந்த மரத்தை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்