டயர் வெடித்து கார் வீட்டிற்குள் புகுந்தது
டயர் வெடித்து கார் வீட்டிற்குள் புகுந்தது.
துறையூர் சாலையில் இருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது பாளையம் அருகே வந்த போது, அந்த காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.