சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

Update: 2023-10-09 18:45 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா விசாரணை நடத்தி கடந்த 17.12.2021 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

20 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசார் மற்றும் அரசு வக்கீலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்