ஓடும் லாரியில் ஜவுளி பண்டல்கள் திருட்டு
அருப்புக்கோட்டை அருகே ஓடும் லாரியில் ஜவுளி பண்டல்களை திருடி சென்றனர்.
அருப்புக்கோட்டை,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடக்கு மயிலோடை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 48). லாரி டிரைவர். இவர் மதுரையில் இருந்து ஜவுளி பண்டல்களை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை வழியாக திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கஞ்சநாயக்கன்பட்டி விலக்கு அருகே லாரியின் பின்னால் யாரோ நிற்பது போல் இருந்ததால் ஜெயக்குமார் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு மேலே ஏறி பார்த்துள்ளார். அப்போது லாரியில் மூடியிருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு லாரியில் இருந்த 2 ஜவுளி பண்டல்கள் திருடு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.