அரசு பஸ் கண்டக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
அரசு பஸ் கண்டக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
கூடலூர்
கூடலூர் மங்குழி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கூடலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் உதயகுமார் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கூடலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். தொடர்ந்து கேரள மாநிலம் கல்ெபட்டாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் உதயகுமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.