வாகனம் மோதி கோவில் இடிந்தது
அம்மாண்டிவிளை அருகே வாகனம் மோதி கோவில் இடிந்தது
மணவாளக்குறிச்சி:
அம்மாண்டிவிளை அருகே வாகனம் மோதி கோவில் இடிந்தது
அம்மாண்டிவிளை அருகே உள்ள வெள்ளைமோடியில் ஊய்காட்டு சிவ சுடலை மாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு மாசானசாமி இருக்கிறது. சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் கோவில் முன்பு உள்ள மாசானசாமி கோவில் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதுபற்றி ஊர் தலைவர் ராதாகிருஷ்ணன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.