வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை

சிவகிரி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-28 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் பஞ்சாயத்து காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வகுமார் (வயது 35). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சிவக்குமார் (22). உறவினர்களான 2 பேரும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் செல்வகுமாரின் உறவினரான ஒரு மாணவியை சிவக்குமார் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி செல்வகுமாரிடம் கூறினார். அவர் சிவக்குமாரை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருந்த சிவக்குமாரை சிலர் அழைத்து சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த செல்வகுமாருக்கும், சிவக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது ெசய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே கொலை தொடர்பாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகிரி அருகே வாலிபர் ெவட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்