சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் முத்துக்குமார் தனது வீட்டு அருகே உள்ள 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு அந்த சிறுமியை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்திரைச்செல்வி போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.