விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-05 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் சபரிநாதன்(வயது 31). சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த கருவேல மரங்களை அவருடைய அக்காள் கலைச்செல்வி வெட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த சபரிநாதன் தனது அக்காள் கலைச்செல்வியை தாக்கியுள்ளார். இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் சபரிநாதன் வீட்டுக்கு விசாரணை நடத்த வந்தனர். அப்போது வீட்டில் இருந்த சபரிநாதனின் மனைவியிடம் சபரிநாதனை போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டு போலீசார் வந்து விட்டனர். நேற்று காலை குடிபோதையில் போலீஸ் நிலையத்துக்கு வந்த சபரிநாதன் தான் கொண்டு வந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ஓடிவந்து சபரிநாதன் மீது தண்ணீரை ஊற்றி, அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் முன்பு குடிபோதையில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்