கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்

கல்லூரி மாணவியை தாக்கிய வாலிபர்

Update: 2022-10-29 18:45 GMT

பீளமேடு

கோவையை சேர்ந்த 18 வயது இளம்பெண், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு, வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையில் அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது, அந்த கல்லூரி மாணவிக்கு தெரியவந்தது. இதனால் அவருடன் பேசுவதை நிறுத்தினார். ஆனாலும் அந்த வாலிபர் கல்லூரி மாணவியை பின்தொடர்ந்து வந்தும், செல்போனில் அழைத்தும் தொல்லை கொடுத்தும் வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வகுப்பு முடிந்து கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவியை அந்த வாலிபர் சந்தித்து பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆத்திரமடைந்து சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்