வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி

நாட்டறம்பள்ளி பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்றது.

Update: 2022-09-26 18:03 GMT

ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்பட்ட நாட்டறம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பூபதிதெரு, சாமுடி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் ஆதார் எண் பெற்று வாக்காளர் அட்டையுடன் இனைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார்.

அதனைத்தொடர்ந்து நாட்டறம்பள்ளி பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்