சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன்வழங்க இலக்கு
கே.வி.குப்பம் வட்டார சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம், வட்டார இயக்க வேளாண்மை அலுவலகத்தில், வாழ்வாதார இயக்கம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கான நேரடி கடன் வழங்குபவது தொடர்பான முகாம் நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா முன்னிலை வகித்தார். காளாம்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மேலாளர் தினகரன் கலந்துகொண்டார். இதில் 26 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 10 ஆயிரம் வங்கியின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும் 36 சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 20 ஆயிரம் வங்கியின் அனுமதிக்கான தர மதிப்பீடு செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ரமணி, சகிலா, ரீட்டா, குமாரி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.