அம்மன் கோவிலில் தரிசனத்துக்கு வந்த சூப்பர்வைசர் மயங்கி விழுந்து சாவு
அம்மன் கோவிலில் தரிசனத்துக்கு வந்த சூப்பர்வைசர் மயங்கி விழுந்து சாவு
அழகியபாண்டியபுரம்:
அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாண் (வயது67). இவர் கீரிப்பாறை அருகே மாறாமலையில் உள்ள ஒரு தனியார் எஸ்ட்டேட்டில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜாண் அந்த பகுதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அங்கு சாமி கும்பிட்டு திரும்பியபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தடிக்காரன்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜாண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கீரிப்பாறைக்கு விரைந்து சென்று ஜாணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு விசாரனண நடத்தி வருகிறார்கள்.