போலீஸ் நிலையத்தில் மரக்கன்று நட்ட சூப்பிரண்டு

தக்கலை போலீஸ் நிலையத்தில் மரக்கன்று நட்ட சூப்பிரண்டு

Update: 2022-12-17 18:45 GMT

தக்கலை, 

தக்கலை போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனைபடி அலங்கார தரை கற்கள் பதிக்கப்பட்டது. மேலும் மேற்கூரை, புல்தரை, செடிகள் போன்ற வசதிகளை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் மேலும் மரங்கள் நட்டு பசுமையாக்குவதற்காக நேற்று காலையில் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வந்தார்.

பின்னர் போலீஸ் நிலைய வளாகத்தில் அவர் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்வேல்குமார், சப் -இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக டி.ஜி.பி. உத்தரவுபடி போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது, குமரி மாவட்டத்தில் 37 போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மாதத்தில் 2-வது சனிக்கிழமை தூய்மை பணி மேற்கொள்ளவும், ஆவணங்களை பராமரிப்பது போன்ற பணிகளை செய்வதற்கு போலீசாரிடம் அறிவுறுத்தி உள்ளேன்.

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு நபருக்கு கேரள லாட்டரியில் பெரிய தொகை கிடைத்ததாலோ என்னவோ தற்போது மக்களிடையே லாட்டரி சீட்டு வாங்கும் கலாசாரம் பெருகி உள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்