தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு திடீர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-06-17 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில், உள்ள பொது நாட்குறிப்புகள், பாராமாற்றும் புத்தகம், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மது, கஞ்சா, புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்