மின்கம்பிகள் உரசியதால் கரும்புகள் தீயில் எரிந்து நாசம்
மின்கம்பிகள் உரசியதால் கரும்புகள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
தோகைமலை அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 44). இவர் பூசாரிப்பட்டி மேற்கு பகுதியில் உள்ள ஆதனூரில் சொந்தமாக சுமார் 4.50 ஏக்கர் பரப்பளவில் ேதாட்டம் வைத்துள்ளார். தற்போது தோட்டத்தில் கரும்புகள் வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்தநிலையில் வயலையொட்டிள்ள மரங்களில் அந்த வழியாக செல்லும் மின் கம்பிகள் மீது உரசி உள்ளது. இதனால் வயல் மேல் செல்லும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் கரும்புகள் தீப்பிடித்து எரிந்தது.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கரும்புகள் அணைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை கரும்பு ஆலையின் ஆய்வாளர் திருப்பதி, வருவாய்துறையினர், தோகைமலை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வயலை ஆய்வு செய்தனர்.