சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் -ஆடியோ வைரலானதால் பரபரப்பு
சாராய வியாபாரியிடம் மாமூல் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராய வியாபாரி ஒருவரிடம் மதுபாட்டிலை அவர் விற்பனை செய்வதற்கு தினமும் ரூ.1,000 வேண்டும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கேட்டுள்ளார். சாராய வியாபாரியுடன் அவர் பேசிய பேரம் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது.
இந்த ஆடியோ குறித்து விசாரித்தபோது சாராய வியாபாரியுடன் பேசியது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஆடியோ விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.