மாணவி காயம்

பஸ்சில் இருந்து தவறி விழுந்து மாணவி காயம்;

Update:2022-08-03 02:02 IST

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை மாணவி வழக்கம்போல் தனது பள்ளியில் இருந்து அரசு பஸ்சில் ஏறி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

மாணவி இறங்கும் சந்தன மாரியம்மன் கோவில் பஸ்நிறுத்தத்தை சிறிது தூரம் கடந்து பஸ் நின்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கீழே இறங்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதில் மாணவி காயமடைந்தார். இதுதொடர்பாக பஸ் டிரைவர், கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்