மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-12 14:58 GMT

சென்னை,

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 3 சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;

"பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இந்தச் சூழ்நிலையை மாற்றிடத் தேவையான பரிந்துரைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளேன்.

கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என அனைவரும், உங்களது கருத்துகளை நீதியரசர் சந்துரு அவர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்