கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் செத்தது

கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் செத்தது

Update: 2023-09-01 17:43 GMT

திருச்சி மணிகண்டம் அருகே அளுந்தூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதிக்கு நேற்று காலை புள்ளி மான் ஒன்று இரைதேடி வந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் மானை துரத்தின. இதனால் தப்பிக்க ஓடிய மான் கம்பி வேலியில் சிக்கி படுகாயம் அடைந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் மானை மீட்டு தண்ணீர் கொடுத்தனர். இருப்பினும் மான் பரிதாபமாக செத்தது. இதுபற்றி தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார், அங்கு வந்து மானின் உடலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் மானின் உடல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூராய்வு செய்து புதைக்கப்பட்டது. அந்த பகுதிக்கு புள்ளி மான் எப்படி வந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அளுந்தூர் அருகே உள்ள விராலிமலை தாலுகா, ஆவூர் பகுதியில் உள்ள லிங்கமலை வனகாட்டில் அதிகளவில் மான்கள் உள்ளன. அவைகள் மேய்ச்சலுக்காக செல்லும்போது சில மான்கள் வழி தவறி ஊருக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இவ்வாறு வரும் மான்கள் நாய்களிடம் சிக்கி கடிபட்டு இறப்பதும், சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. எனவே இவ்வாறான மான்கள் இறப்பை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்