தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனுக்கு வலைவீச்சு

ஏர்வாடி அருகே தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-01-23 20:20 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள சேசையாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 76). மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தற்போது மீனாட்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவரது 3-வது மகன் ராஜசெல்வம். இவர் தந்தையுடன் மேளம் அடிக்க செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக இவர் வேலைக்கு ஒழுங்காக வராததால், பன்னீர்செல்வம், ராஜசெல்வத்தை மேளம் அடிக்க அழைப்பதில்லை. இதுசம்பந்தமாக தந்தை, மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் செய்வதற்காக பன்னீர்செல்வம் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து ராஜசெல்வம், அவரை வழிமறித்து அவதூறாக பேசி, அரிவாளால் வெட்ட முயற்சி செய்தார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசெல்வத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்