வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
அருப்புக்கோட்டையில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை தேவாங்கர் நந்தவன தெருவில் ராஜேஷ் என்பவர் வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வீட்டிற்குள் பல இடங்களில் வெகு நேரமாக தேடிப் பார்த்தனர். வீட்டின் மேற் பகுதியில் ஓட்டுக்குள் சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு அங்கும் இங்குமாய் ஊர்ந்து சென்று தொங்கி கொண்டிருந்ததை கண்டனர். தீயணைப்புத் துறையினர் நவீன பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் கொண்டு அந்த பாம்பினை லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.