தமிழகத்துக்கு பெரும் மதிப்பு மிக்கவர்களை வழங்கியது சிவகங்கை மண் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்துக்கு பெரும் மதிப்பு மிக்கவர்களை வழங்கியது சிவகங்கை மண் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

Update: 2022-06-08 07:44 GMT

சிவகங்கை.

சிவகங்கை மாவட்டம் வேங்கைபட்டியில் அமைக்கப்ட்டுள்ள சமத்துவபுரத்தை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, பூங்கா என 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தை அவர் இன்று திறந்து வைத்தார்.

அதன் பின்னர் சிவகங்கை காரையூரில் ஊரக உள்ளாட்சித்துறை, மருத்துவம், நீர்வளத்துறை சார்பில் ரூ.119.68 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.24.77 கோடி மதிப்புள்ள 44 முடிவுற்ற நலப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.136.445 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த அதிமுக ஆட்சி செயலற்ற, நிர்வாக திறமையற்ற ஆட்சி. கலைஞரைப் போல சிறந்த முதல்-அமைச்சராக செயல்படுவதாக துனை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டியதை பெரிதாக கருதுகிறேன். கலைஞர் போல் எந்த கொம்பனாலும் ஆட்சி செய்ய முடியாது. ஆனால் அவரை ஒப்பிட்டு கூறியது எனக்கு மிகுந்த பெருமை.

சாலையில் மக்கள் கையசைத்து வரவேற்று அன்பும், அரவணைப்பும் செலுத்துவது என்னை ஊக்கப்படுத்துகிறது. இப்போது மட்டுமல்ல, எப்போதும் நான் இதேபோல் சுறுசுறுப்புடன் செயல்படுவேன்.

கோட்டைவேங்கைப்பட்டி கிராமத்தில் சமத்துவப்புரத்தை திறந்து வைத்தேன். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டங்களில் ஒன்று சமத்துவபுரம் திட்டம் தான். தமிழகத்துக்கு பெரும் மதிப்பு மிக்கவர்களை வழங்கியது சிவகங்கை மண் தான். கண்ணதாசன், பொன்னம்பல அடிகளார் போன்றவர்களை சிவகங்கை மண் தந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்