ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது

ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம் நடைபெறுவதால் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது.

Update: 2023-04-17 18:49 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீரங்கத்தில் நாளை தேரோட்டம் நடைபெறுவதால் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது.

சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் அவரது பிறந்த தினத்தை யொட்டி சித்திரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா நாளை ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் ெரங்கநாதருக்கு வருடம் தோறும் ஆண்டாள் அணிந்து கொடுத்த பட்டு வஸ்திரம், மாலை, கிளி ஆகியவை கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில்யானை மீது வைத்து ஊர்வலம் ஆக கோவிலுக்குள் கொண்டு சென்று ெரங்கநாதருக்கு பட்டு வஸ்திரம், மாலை, கிளிகள் அணிவிக்கப்படும்.

அதன் பிறகு தேரோட்டம் நடைபெறும். இந்த விழாவிற்காக வஸ்திரங்கள், மாலை, கிளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் சென்றது

முன்னதாக ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெற்றன. அதன் பிறகு ஆண்டாள் அணிந்து கொடுத்த பட்டு வஸ்திரங்கள், மாலை, கிளி ஆகியவற்றை ரமேஷ் பட்டர் மாசி வீதியில் வழியாக மேள தாளங்கள் முழங்க கொண்டு வந்தார்.

இதையடுத்து அதனை தக்கார் ரவிச்சந்திரன். நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் ஸ்ரீரங்கம் கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்