ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளை தடுத்த பள்ளி நிர்வாகிகள்
நெடுஞ்சாலைக்கு ெசாந்தமான இடத்தை ஆக்கிரமித்து பள்ளி கட்டிடம் கட்டியதை அகற்ற சென்ற அதிகாரிகளை பள்ளி நிர்வாகிகள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெடுஞ்சாலைக்கு ெசாந்தமான இடத்தை ஆக்கிரமித்து பள்ளி கட்டிடம் கட்டியதை அகற்ற சென்ற அதிகாரிகளை பள்ளி நிர்வாகிகள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்கிரமிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் ராஜாபாளையம் என்ற இடத்தின் அருகே தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது.
இதனை அகற்றி அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பள்ளிக்கு நோட்டீசு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அகற்றவில்லை.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.
வாக்குவாதம்
அப்போது அப்பகுதிக்கு வந்த பள்ளியின் நிர்வாகிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்த அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதமும் நடந்தது. முடிவில் பள்ளி நிர்வாகிகள் ஒரு வார அவகாசம் கேட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அதற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டு சென்றனர்.