அரசு பள்ளியில் குவிக்கப்பட்டிருந்த மணல் ஏலம் விடப்பட்டது

அரசு பள்ளியில் குவிக்கப்பட்டிருந்த மணல் ஏலம் விடப்பட்டது

Update: 2023-01-03 18:28 GMT

வள்ளிமலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களாக டன் கணக்கில் மணல் குவிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து  தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் அந்த மணலை பொது ஏலம் விட்டு அந்த பணத்தை அரசு கணக்கில் வரவு வைக்க வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி அங்கு குவிக்கப்பட்டிருந்த மணல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. மொத்தம் 15 யூனிட் மணல் ரூ.38,250- க்கு ஏலம் விடப்பட்டது. அந்த பணம் அரசு கருவூலக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்