மனநலம் பாதித்து குணமடைந்தவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை தொடக்கம்

மனநலம் பாதித்து குணமடைந்தவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-07 19:16 GMT

மனநலம் பாதித்து குணமடைந்தவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் எஸ்.ஆர்.டி.பி.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் தமிழக அரசின் சார்பில் இடைநிலை பராமரிப்பு இல்லம் உள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்த பயனாளிகள் 20 பேர் உள்ளனர். அவர்கள் சுயமாக வாழ கற்பூரம் தயாரித்தல், கூடை பின்னுதல், டோர்மேட் மிதியடி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் விற்பனை செய்ய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு விற்பனையை தொடங்கி வைத்தார். இங்கு விற்கப்படும் கற்பூரம் கலப்படம் ஏதும் இல்லாத தூய்மையானது ஆகும். மேலும் கூடைகள், டோர்மேட் மிதியடி ஆகியைவ மலிவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம் என கலெக்டர் கூறினார். அப்போது எஸ்.ஆர்.டி.பி.எஸ். இல்ல பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்