ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்ததால் யூனியன் அலுவலகங்களில் பணி பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-13 19:15 GMT

விருதுநகர்ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்ததால் யூனியன் அலுவலகங்களில் பணி பாதிக்கப்பட்டது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் தங்களது 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் 871 அலுவலர்களில் 407 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது. வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான பணியிடங்களை நிரப்ப வேண்டும் 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறை படுத்த வேண்டும் அனைத்து நிலை பதவி உயர்வையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும் அரசாணை எண் 54-ஐ திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்