சங்கராபுரம் அருகேதீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்
சங்கராபுரம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமானது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு நேற்று மதியம் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றதுடன், இதுபற்றி சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் வீடு மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியை சங்காரபுரம் தாசில்தார் சரவணன் வழங்கினார்.