ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சியை சேர்ந்தவர் கமலபதி மகன் வினோத் (வயது 32). பந்தவக்கோட்டை ஏ.டி. காலனி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் விசித்திரா (23). பி.எட். பட்டதாரி. இவர்கள் இருவரும் காதலித்து குமாரமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காதல் ஜோடியான இவர்களிடம் வயதை காரணம் காட்டி போலீசார் எழுத்துப் பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.