போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது

Update: 2022-06-02 15:34 GMT

சரவணம்பட்டி

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் தங்கம். இவருடைய மகன் கார்த்திக் (வயது29). ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியை சேர்ந்த பாலுசாமி என்பவரது மகள் கவுசல்யா (25). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக செல்போனில் பேசி பழகி காதலித்து வந்தனர்.

இதை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் அவரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் கவுசல்யா தன்னை அழைத்து செல்லுமாறு தனது காதலனிடம் கூறி உள்ளார். அதன்படி கார்த்திக் சென்று கவுசல்யாவை கோவைக்கு அழைத்து வந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்தார்.

இதற்கிடையே கவுசல்யா கடத்தப்பட்டதாக அவருடைய உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை போலீசார் கோவை வந்தனர். இதை அறிந்த கார்த்திக் மற்றும் கவுசல்யா ஆகியோர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் 

அங்கு வந்த சிவகங்கை போலீசார், கார்த்திக், கவுசல்யா ஆகிய 2 பேரையும் அழைத்து செல்ல முயன்றனர். இதற்கு கார்த்திக் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருவரின் உறவினர்கள் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து கவுசல்யாவை மட்டும் சிவகங்கை போலீசார் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்