காதல் ஜோடி தஞ்சம்

பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

Update: 2022-06-19 15:00 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள சங்கால்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் தினேஷ்குமார் (வயது 24). இவர், ஒட்டுப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவை சேர்ந்த சுபேதா (20) என்பவருக்கும் இடைேய பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் கடந்த 16-ந்தேதி காதல் ஜோடியினர் மில்லுக்கு வேலைக்கு செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியேறினர். செம்பட்டி அருகேயுள்ள மாரியம்மன் கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு, பட்டிவீரன்பட்டி போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் காதல் ஜோடியினரின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் காதல் ஜோடியினரை பெற்றோர் ஏற்கவில்லை. இதையடுத்து காதல் ஜோடி மேஜர் ஆவதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் போலீசார் அவர்களை விருப்பம் போல வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்